புதுச்சேரி செட்டிப்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் அலகுபோடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2019 04:07
புதுச்சேரி:செட்டிப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் ஆடி உற்சவத்தில் இன்று 26 ம் தேதி அலகு போடும் விழா நடக்கிறது.மண்ணாடிப்பட்டு அடுத்த செட்டிப்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் 21ம் ஆண்டு ஆடி உற்சவ விழா கடந்த 23ம் தேதி கெங்கையம்மனுக்கு கூழ்வார்த்தலுடன் துவங்கியது. இரண்டாம் நாள் உற்சவத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நேற்று 24ம் தேதி காலை 6.00 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று 26ம் தேதி காலை 10.00 மணிக்கு அலகு போடுதல், மதியம் 12.00 மணிக்கு கூழ்வார்த்தல் நடக்கிறது. நாளை 26ம் தேதி மாலை 5.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.