காரைக்கால்:காரைக்காலில் புனித சந்தனமாதா ஆலய திருவிழாவில், இன்று 26ம் தேதிதேர் பவனி நடக்கிறது.
காரைக்கால், நெடுங்காடு சாலையில் உள்ள பிள்ளை தெருவாசல் பகுதியில் புனித சந்தனமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா. நேற்று முன்தினம் (ஜூன்., 23ல்), ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய சகாயராஜ் தலைமையில், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நேற்று (ஜூன்., 25ல்) மாலை 6.00 மணிக்கு சிறிய தேர் பவனி, நற்செய்தி ஜெபகூட்டம் நடந்தது.இன்று (ஜூன்., 26ல்) மாலை 6.00 மணிக்கு திருவிழா திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி திருப்பணி முடிந்து கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை பங்குத் தந்தைகள் மற்றும் பிள்ளைத்தெருவாசல் கிராம பஞ்சாயத்தார் செய்துள்ளனர்.