பதிவு செய்த நாள்
27
ஜூலை
2019
02:07
நாமக்கல்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, சின்னமுதலைப்பட்டி அம்மச்சியம்மன் கோவிலில், பால்குட ஊர்வலம் நடந்தது. ஆடி, இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு, அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் விரதமிருந்து அம்மனை வழிபட்டனர். நாமக்கல் அடுத்த சின்னமுதலைப்பட்டி அம்மச்சியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலை, மஹா கணபதி ?ஹாமம், நவக்கிரக ?ஹாமம், சுதர்ஷன ?ஹாமம் நடந்தது. நேற்று காலை, பெரியவீதி, காவடி பழனியாண்டவர் கோவிலில் இருந்து, அம்மனுக்கு அபி ஷேகம் செய்ய, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து, கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபி ஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.