பதிவு செய்த நாள்
27
ஜூலை
2019
02:07
தர்மபுரி: தர்மபுரி அடுத்த செந்தில்நகரில், புற்று கோவில் உள்ளது. வெள்ளிக்கிழமை நாட்களில், ஏராளமான பெண்கள், புற்றில் பால், முட்டை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவைகளை தூவி, புற்றை சுற்றி வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு, நேற்று ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புற்றில் பால் ஊற்றி பெண்கள் வழிபட்டனர். பின்னர், நாகதேவதையை வழிபட்டனர். இதேபோல், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன், வெளிப் பேட்டை தெரு அங்காளம்மன் கோவில்களில், நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.