திருப்புத்துார் : திருப்புத்துார் தி.புதுப்பட்டியில் மாவூடியூத்து காளியம்மன் கோயில் ஆடி சிறப்பு பால்குட விழா நடந்தது.கிராமத்தினர் சேர்ந்து கொண்டாடும் இந்த ஆடி சிறப்பு விழாவை முன்னிட்டு ஜூலை 18 ல் காப்புக்கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து ஒரு வாரம் விரதம் இருந்த பக்தர்கள் தினசரி இரவு ஆண்டிய்யா கோயில் வாசலில் ஆண்களும்,பெண்களும் கும்மி கொட்டி வழிபட்டனர். நேற்று ஆடி 2வது வெள்ளியை முன்னிட்டு கோயிலிலிருந்து சாமியாட்டம் ஆடி, பால்குடம், மதுக்குடம், பூத்தட்டுடன் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனின் வேலுக்கு பாலாபி ஷேகம் நடந்தது.