பதிவு செய்த நாள்
31
ஜூலை
2019
02:07
கமுதி : ராமநாதபுரம் தேவஸ்தான, சமஸ்தானத்திற்குட்பட்ட கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில்சோம மஹா பிரதோசம் விழாவை முன்னிட்டு, நந்தி பகாவானுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், அன்னம், நெய் உட்பட வாசனை திரவியங்களின், சிபு அபிஷே கம், தீபாராதனை நடந்தது. பிரதோசத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு, தீப அலங்காரம், பக்தர்கள் கொண்டு வந்த பால் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டுசிபு அபிஷேகம் செய்யப்பட்டது.மீனாட்சி சமேத சந்தரேஸ்வரர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காளை வாகனத்தில், கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. சிபு அபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.