ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மகான் புலவர் அப்பா தர்கா கந்தூரி விழா கொடியேற்றத் துடன் துவங்கியது.மவுலானா மவுலவி நஜூமுதீன் ஆலிம், முன்னாள் ஜமாத் செயலாளர் சீனிமுஹமது தலைமையில் சிறப்பு துவா ஓதி தர்கா கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது.
விழாவின் தொடர்ச்சியாக ஆக.,1ல் பொதுமக்களுக்கு நெய்சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.,8 ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
கொடியேற்ற விழாவில் கோடைஇடி அஸ்ரப் அலி, முன்னாள் ஜமாத் தலைவர் சவுக்கத்அலி, கமிட்டி பொறுப்பாளர்கள் லியாக்கத்அலி, அயூப்கான், செய்யது அலி, அலிசுல்த்தான், முஹமது அலி ஜின்னா, செய்யது அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.