புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில், அமாவாசை யை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் (ஜூலை., 30ல்) நடந்தது.
அன்று மாலை 6.00 மணிக்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ங்கள் நடந்தது. இரவு 9.30 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, தாலாட்டு பாடி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இதேபோல் பூவாலை அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.