கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம் பரேஸ்வரர் கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி நேற்று (ஆக., 3ல்)சிறப்பு பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று (ஆக., 3ல்) காலை 5:30 மணிக்கு பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு அபிஷே கம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு 16 வகையான பொருட் கள் மூலம் அபிஷேகம் நடந்தது.சிறப்பு அலங்காரம் செய்து வைத்து லலிதா சகஸ்ர நாம மந்திரங்கள் வாசித்து அர்ச்சனை நடந்தது. பெண்கள் எலுமிச்சை பழம் தீபங்கள் ஏற்றி வழிபட்ட பின் சுமங்கலி தாம்பூலங்கள் கொடுத்தனர். மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல், கள்ளக்குறிச்சி சிவன் கோவில், கங்கையம்மன் கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.