பதிவு செய்த நாள்
03
ஆக
2019
03:08
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம், கமலாநகரில், சக்தி கணபதி, மகா முனீஸ்வரர், சப்த கன்னிமார் பரிவாரங்கள் உடனமர், வீர கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. ஆடி மாதத்தில் திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு திருவிழா நேற்று (ஆக., 2ல்) நடந்தது.
முன்னதாக அதிகாலை, 5:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்று, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் அலகு, முதுகு அலகு, மயில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.