பதிவு செய்த நாள்
03
ஆக
2019
03:08
ஈரோடு: ஆடி மாத மூன்றாவது வெள்ளியை ஒட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆடி மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோடு பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் களில், நேற்று (ஆக., 2ல்) அதிகாலை நடை திறக்கப்பட்டது. பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தன. கருங்கல்பாளையம் ஜெய கோபால் வீதி, தேவி கருமாரியம்மன், வீரலட்சுமி அலங்காரத்திலும், ஈ.பி.பி.நகர் சக்தி மாரியம்மன் அம்மன், 1,008 மஞ்சள் கயிற்றால் நித்ய சுமங்கலி அலங்காரத்திலும், வீரப்பன் சத்திரம் சுக்கிரகவுண்டன் வலசு மாரியம்மன் காய், கனி, இனிப்பு மற்றும் தானியங்கள் கொண்டு அன்னபூரணி அலங்காரத்திலும், சூளை அங்காள பரமேஸ்வரியம்மன், ஆயிரம் கண் அம்மன் அலங்காரத்திலும், சத்தி ரோடு எல்லை மாரியம்மன், வரலட்சுமி அலங்காரத் திலும், கருங்கல்பாளையம் கமலா நகர், சமயபுரத்து மாரியம்மன் நாகக்கன்னி அலங்காரதி லும், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் மஞ்சள் காப்பு மகமாயி அலங்காரத்திலும் அருள் பாலித் தனர். கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவிலில், மெகா அன்னதானம் நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், ஊத்துக்குழி அம்மன், ஆதிபராசக்தி அம்மன், மற்றும் சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பிளேக் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தரு ளினார்.
* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், பவானி தேவபுரம் கருமாரியம்மன், வேம்பத்தி சொக்க நாச்சியம்மன், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
*பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், காலை முதலே பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில், பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். கோபி சாரதா மாரியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. கோபி பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.