திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆக.7 ல் ஆடித்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2019 03:08
திண்டுக்கல்:தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடிப்பெருந்திருவிழா ஆக.7 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவிழா கொடியேற்றம் ஆக.7 காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது.
விழாவின் பத்து நாட்களும் அன்ன வாகனம், கேடயம், கருட, சிம்ம வாகனத்தில் சுவாமி புறப் பாடு நடக்கிறது. ஆக.13 ல் மாலை 6:30 முதல் 7:30 மணிக்குள் திருக்கல்யாணம், ஆக.15 ல் மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஆக.17 ல் மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது என செயல் அலுவலர் நாராயணி தெரிவித்தார்.