புவனகிரி அருகே கங்கையம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2019 02:08
புவனகிரி: மேலக்கீரப்பாளையம், மேட்டுத்தெரு கங்கையம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது.
மேலக்கீரப்பாளையம் மேட்டுத்தெரு கங்கையம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, 6ம் ஆண்டு தீ மிதி உற்சவத்தில், கடந்த மாதம் 26ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகத்தை தொடர்ந்து, நேற்று முன்தினம் (ஆக., 5ல்) மாலையில் நடந்த தீ மிதி உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.