கடலுார்: தாழங்குடா மகா மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவத்தை யொட்டி, காவடி ஊர்வலம் நடந்தது.
கடலுார் அடுத்த தாழங்குடா மகா மாரியம்மன் கோவிலில் 58ம் ஆண்டு செடல் உற்சவம் நேற்று முன்தினம் (ஆக., 6ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (ஆக., 7ல்)காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து, பெண்ணையாற்றில் காவடி பூஜை நடந்தது.பக்தர்கள் காவடியை சுமந்து, வீதியுலாவாக கோவிலை வந்தடைந்தனர். 10ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.