மானாமதுரை வீர அழகர்கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2019 02:08
மானாமதுரை:மானாமதுரை வீரஅழகர்கோயில் ஆடி பிரம்மோற்ஸவ திருவிழா நேற்று (ஆக., 7ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று (ஆக., 7ல்) காலை கொடியேற்றத்துக்காக வீரஅழகர் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி, சவுந்தரவல்லி தாயாருடன் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு மஞ்சள் கயிறால் காப்பு கட்டப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கும். திருக்கல்யாணம் ஆக., 12ந் தேதி இரவு 7:00 மணிக்கும், தேரோட்டம் ஆக., 15ந் தேதி 6:00 மணிக்கும், தீர்த்தவாரி 16ந் தேதியும் நடைபெற உள்ளது.