பதிவு செய்த நாள்
08
ஆக
2019
02:08
பொள்ளாச்சி:பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில், சாகம்பரி மகா யாக பூஜை இன்று (8ம் தேதி) நடக்கிறது.
விழாவையொட்டி மாலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, அனுக்ஞை, புண்யாகம், பஞ்சகவ்யம், கலச ஆவாகனம், சகஸ்ரநாம திரிசதி அர்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர் ந்து, சாகம்பரி மஹாத்மியம், பாராயணம், தீபாராதனை நடக்கிறது.
நாளை, 9ம் தேதி காலை, 8:00 மணிக்கு விநாயகர் பூஜை, வேதபாராயணம், அக்னி கார்யம், மூல மந்திரம் ஹோமம், ஸ்ரீ சாகம்பரி மகாத்மிய ஹோமம், திரவியாஹுதி, பூர்ணாஹுதி, அம்பிகை க்கு கலச அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.