பதிவு செய்த நாள்
08
ஆக
2019
03:08
திருப்போரூர்:திருப்போரூரில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பல வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, திருப்போரூரில், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.இவற்றில், 1 அடி விநாயகர் சிலை, 1,500 ரூபாய் முதல்; 13 அடி சிலை, 33 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. சிங்கம், மயில், நாகம், யானைகளுடன் சேர்ந்த விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன.