பதிவு செய்த நாள்
08
ஆக
2019
04:08
பரக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோதற்ஸவ விழா
நேற்று (ஆக., 7ல்) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதன்படி நேற்று (ஆக., 7ல்) காலை 9:30 மணிக்கு கொடிமரத்திற்கு அபிஷேகம், சிறப்பு பூஜை கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு அர்ச்சகர்கள் வேத, மந் திரம் முழங்க கருட கொடியை ஏற்றினர். பின்னர் இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் மோகினி அலங் காரத்தில் வீதிவலம் வந்தார்.
தொடர்ந்து தினமும் பெருமாள் சிம்ம, சேஷ, கருட, ஹனுமன் வாகனங்களில் வீதிவலம் வரவுள்ளார். ஆக., 12ல் இரவு 7:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் -ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சியும், மறுநாள் பூப்பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரு ள்பாலிப்பார். ஆக., 14 இரவு குதிரை வாகனத்திலும், மறுநாள் காலை 9:30 மணிக்கு மேல் ஆடி தேரோட்டம் நடக்கும்.
ஆக., 16 ல் காலை தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். இதனை யொட்டி கோயில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடு களை சுந்தர ராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.