ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மஹா கால பைர வர் கோவிலில், அஷ்டமி பூஜை சிறப்பு வாய்ந்தது.இன்று, 8ம் தேதி அஷ்டமி விழாவை ஒட்டி, யாகசாலை அமைத்து சிறப்பு பூஜையும், மூலவர் பைரவருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்படும்.