பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
ஈரோடு: மழைக்காலம் தொடங்கி விட்டதால், வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டுள்ள கபாலீஸ் வரர் கோவில் புதிய தேருக்கு பாதுகாப்பு அரணாக ஷெட் அமைக்கப்படுகிறது.
ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்ற சிவ தலமாகும். இக் கோவிலின் தீவிர பக்தர் ஒருவர், புதிதாக மரத் தேர் ஒன்றை செய்து கோவிலுக்கு காணிக்கை யாக வழங்கினார். கடந்த மே மாதம் கோலாகமாக தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்துக்கு பின், பெருமாள் கோவில் தீப கம்பத்தின் அருகில், காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக, வெட்ட வெளியில் இருந்த மழையில் நனைந்ததால் சேதமாகி விடும் என்பதால், ஷெட் அமைக்க பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை சுற்றி, தகர ஷெட், மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக நேற்று (ஆக., 9ல்) காலை, இரும்பு சட்டங்கள் மூலம், நான்கு புறமும் தூண்களும், முன்பக்கம் திறந்து தேர் வெளியில் எடுக்கும் வகையில் பிரத்யோகமாக முன் பக்க கேட் அமைக்கப்படுகிறது. நிரந்தரமான இடத்துக்கு தேர் இடமாற்றம் செய்யும் வரை, தற்காலிக ஷெட்டில் நிறுத்தப்பட்டிருக்கும்.