பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
ஈரோடு: வரலட்சுமி நோன்பு விழாவையொட்டி, வீடுகளில் பெண்கள் சுமங்கலி பூஜை செய்து வழிபட்டனர். குடும்பத்தில் உள்ள அனைவரும், ஆரோக்கியத்துடன் நோய், நொடிகள் இன்றி நீண்ட நாள் வாழ வேண்டும், கல்வி, செல்வம் பெருகி, மஹா லட்சுமி வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என, வேண்டிக் கொண்டு பெண்கள் வரலட்சுமி நோன்பு கடைபிடிப்பது வழக்கம்.
அதன்படி, ஈரோட்டின் பல இடங்களில் நேற்று (ஆக., 9ல்) வரலட்சுமி நோன்பு கொண்டாடப் பட்டது. ஈரோடு டீச்சர்ஸ் காலனி பகுதிகளில் உள்ள வீட்டு வாசலில், துளசி மடம், கலசம் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து வீட்டின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த மஹாலட்சுமி படத்துக்கு குங்குமம் அர்ச்சனை, புஷ்ப அர்ச்சனை மற்றும் சுமங்கலி பூஜை செய்து வழிபட் டனர். நிறைவில் பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு நோன்பு கயிறு கொடுத்து, ஒரு வருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதே போல், கோட்டை கஸ் தூரி அரங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில், பெண்கள் பலர் மஹாலட்சுமியை வணங்கி நோன்பு கயிறு கட்டிக் கொண்டனர்.