பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவிலில் நேற்று முன்தினம் (ஆக., 8ல்) மாலை, ஆடி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு படி பூஜை நடந்தது. சென்னிமலை, சிவஞான சித்தர் பீடம் சார்பில், ஆடி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு படி பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் (ஆக., 8ல்) மாலை, 6:30 மணி முதல் கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல், சரவண சித்தர் தலை மையில் மலையில் உள்ள, 60 படிக்கட்டுகளுக்கு மஞ்சள் நீர், பால், பன்னீர் தெளித்து, விபூதி, குங்குமம் இட்டு, வாழை இலை போட்டு அதில் வெற்றிலை, பாக்கு, கனி வகைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இரவு 8:00 மணிக்கு படிபூஜை நிறைவு பெற்றது. ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.