பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
நாமக்கல்: ஆடி நான்காவது வெள்ளியை முன்னிட்டு, மாரியம்மன், காளியம்மன் கோவிகளில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் விரதமிருந்து அம்மனை வழிபடுவர். நேற்று (ஆக., 9ல்), நான்காவது வெள்ளியை முன்னிட்டு, அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடந்தது.
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட வற்றால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட் டனர். அதேபோல், கடைவீதி வாசவி மஹாலில், வரலட்சுமி விரதம் மேற்கொண்ட பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் அருள்பாலித்தார். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.