பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
சேலம்: வரலட்சுமி விரதத்தையொட்டி, சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில், திருவிளக்கு மாங்கல்ய பூஜை நடந்தது. அதில், திரளான பெண்கள் தரிசனம் செய்தனர்.
கணவர், நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என, பெண்கள் வரலட்சுமி நோன்பு நாளில் விரத மிருந்து, அம்மன் கோவில்களில் வழிபடுவர். அதன்படி, சேலம் மாவட்டம், ஓமலூர், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆன்மிக நற்பணி குழு சார்பில், நேற்று (ஆக., 9ல்), திருவிளக்கு மாங் கல்ய பூஜை நடந்தது. அதில், 300க்கும் மேற்பட்ட பெண்கள், தரிசனம் செய்தனர். மாரிய ம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பால்குட ஊர்வலம்: இடைப்பாடி, கவுண்டம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடங்களை எடுத்துக்கொண்டு, செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்திலிருந்து, ஊர்வ லமாக புறப்பட்டனர். தோப்பூர் வழியாக, கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் வளா கத்தை அடைந்தனர்.
பின், பச்சை பட்டாடையில் சின்னமாரியம்மன் காட்சியளித்தார். ஆத்தூர், பெரியமாரியம்மன் கோவிலில், ஏராளமான சுமங்கலி பெண்கள் வழிபட்டனர். அவர்களுக்கு, குங்குமம், மஞ்சள், வளையல், பூ பிரசாதமாக வழங்கப்பட்டது. அதேபோல், ஆத்தூர், கோட்டை மதுரகாளியம்மன், ஆறகளூர் அம்பாயிரம்மன், ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரை சமயபுரம் மாரியம்மன், பெத்த நாயக்கன்பாளையம் கோட்டக்கரை மாரியம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், பேளூர் கரடிப்பட்டி லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களில், ஏராளமான பெண்கள் தரி சனம் செய்தனர்.