பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
சேலம்: ஆடி நான்காவது வெள்ளியையொட்டி, சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில், நேற்று (ஆக., 9ல்) காலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராத னை செய்து, ரத்தின அங்கி அலங்காரத்தில் மாரியம்மன் காட்சியளித்தார். நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள், குடும்பம் சகிதமாக அம்மனை தரிசித்தனர். பலர், பொங்கல் வைத்து, மாவிளக்கு தீபமேற்றி வழிபட்டனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால், மதியம், நடை சாத்தாமல், இரவு, 10:00 மணி க்கும் மேல், தரிசனம் நடந்தது. கடந்த ஜூலை, 8ல், முகூர்த்தக்கால் நட்டு, ஆடி திருவிழா தொடங்கியது. நேற்று, தாலி வரம் வேண்டி கன்னி பெண்கள், குழந்தை பாக்கியம் கேட்டு, திருமணமான பெண்கள், முகூர்த்தக்காலில், மஞ்சள் கயிறு, வளையல் ஒருசேர கட்டி வேண்டுதல் வைத்தனர். முகூர்த்தக்கால் தென்படாத அளவுக்கு, மஞ்சள் கயிறு, வளையல் குவிந்தது.
திருவிளக்கு பூஜை: ஆடி வெள்ளியையொட்டி, சங்ககிரி, சந்தைப்பேட்டை, செல்லாண்டியம் மன் கோவிலில், மக்கள் நலம் பெற வேண்டி, திருவிளக்கு பூஜை, நேற்று (ஆக., 9ல்) நடந்தது. முன்னதாக, சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. அதில், ஏராளமான பெண்கள், குத்து விளக்கேற்றி, பச்சை வாழை இலையில், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து, சுவாமியை வழிபட்டனர். அப்போது, அம்மன் சிறப்பு அலங் காரத்தில் அருள்பாலித்தார்.