பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
மல்லூர்: மல்லூர், கோட்டைமேடு பகுதியில், சனீஸ்வரன் கோவில் உள்ளது. உள்ளுர் பிரமுகர் கள், மக்களிடம் நன்கொடை பெற்று, கோவிலை நிர்வகிக்கின்றனர்.
ஒரு அர்ச்சகர், சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வந்தார். அவரை, இரு மாதத்துக்கு முன் நிறுத்திவிட்டனர். தற்போது, பூசாரியை வைத்து, பூஜை செய்கின்றனர். அவருக்கு, முறைப் படி பூஜை செய்ய தெரியவில்லை. இதனால், ஏழரை, அஷ்டமத்து சனி நடக்கும் மக்கள், தங்கள் பெயருக்கு, மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய, அர்ச்சகர் இல்லை என, வருத்தப்படுகின்றனர். அதனால், வேத மந்திரம் தெரிந்த, அர்ச்சகரை நியமிக்க, பக்தர்கள் வலியுறுத்தினர்.