மயிலம்: மயிலம் அடுத்த ஆலகிராமம் ஓம்சக்தி கோவிலில் நேற்று (ஆக., 9ல்) ஆடித்திருவிழா வை முன்னிட்டு பால் குட ஊர்வலம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று (ஆக., 9ல்) காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் போன்ற நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.பின்னர் தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.