பதிவு செய்த நாள்
12
ஆக
2019
02:08
நாமக்கல்: நாமக்கல் அடுத்த என்.கொசவம்பட்டி, கவரா நகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று (ஆக., 11ல்) காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று (ஆக., 11ல்) காலை, 9:00 மணிக்கு மோகனூர் காவிரியாற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை, பால தண்டாயுதபாணி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
மதியம், 2:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, இரவு, 8:00 மணிக்கு கம்பம் நட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு, 7:00 மணிக்கு கிராம பூஜை நடக்கிறது. வரும், 18ல் திருத்தேரில் கலசம் வைத்தல், மாலை, 6:00 மணிக்கு திருமாங் கல்யம் சாற்றுதல், தொடர்ந்து சக்தி அழைத்தலும், 8:30 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நடக் கிறது. 19ல் அதிகாலை அம்மன் குதிரை வாகனத்தில் ஊர்வலம், 4:00 மணிக்கு பெண்கள் அங்கப்பிரதட்சனம், 6:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் வேடுபரி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை, 4:00 மணிக்கு அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி மிதித்தல், அங்கப்பிரதட் சனம் நடக்கிறது. 20ல் காலை, 8:30 மணிக்கு அம்மன் திருத்தேர் ஊர்வலம், 10:30 மணிக்கு கிடா வெட்டுதல், 6:00 மணிக்கு மஞ்சள் நீர் வழங்கல், சுவாமி கிணற்றில் கம்பம் விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 21 இரவு, 7:30 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலிக்கிறார்.