தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அபூர்வ சுவடி நூல்களில் சப்தார்த்த சிந்தாமணி என்பதும் ஒன்றாகும். கி.பி. 1684 முதல் 1712 வரை தஞ்சையை ஆண்ட ஷாஜி என்ற மராட்டிய மன்னரின் அவைப் புலவராய் விளங்கிய சிதம்பரக்கவி என்பவரால் எழுதப்பட்டது. இந்த நூலுக்குத் தனிச் சிறப்பு ஒன்று உள்ளது. வடமொழியில் உள்ள இந்நூலை முதல்சுவடியில் இருந்து படிக்கத் தொடங்கினால் ராமாயணமாகவும்; கடைசி சுவடியின் கடைசி வரியிலிருந்து திருப்பிப் படித்தால் பாகவதமாகவும் அமைந்துள்ளதாம். இவ்வாறு அமைந்திருப்பதே ஓர் அதிசயம் தானே?