பதிவு செய்த நாள்
13
ஆக
2019
03:08
ஓசூர்: ஓசூர் அருகே உள்ள, நாகம்மா தேவி கோவில் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, சின்ன எலசகிரி காமராஜ் நகரில், நாகம்மா தேவி கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, 12ம் ஆண்டு திருவிழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த இத்திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண் பக்தர்கள் மாவிளக்கு ஏந்தி, ஊர்வலமாக சென்று, கூழ் ஊற்றி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பலர் ஆடு, கோழி களை பலியிட்டு, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மணி செய்திருந்தார்.