பதிவு செய்த நாள்
13
ஆக
2019
03:08
நாமக்கல்: ”வரும், 15ல், தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவிலில், முதன் முறையாக, 27 கி.மீ., தூர கிரிவலம் துவங்குகிறது,” என, தலைமலை சேவா டிரஸ்ட் அறங்காவலர் ராஜேஷ் கூறினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எருமப்பட்டி அருகே, வடவத்தூர் ஊராட்சி, தலைமலையில் சுயம்புவாக பெருமாள் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக் கிறார்.
பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், 2,700 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிலின் சுற்றுச் சுவரை பிடித்தபடி, அரையடி மட்டுமே உள்ள சுவற்றை ஒட்டிய பகுதியில், கால் வைத்து கிரிவலம் நடத்தி, வேண்டுதலை நிறைவேற்றி வந்தனர்.
இந்நிலையில், பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்க வேண்டி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், வரும், 15 காலை, 7:30 மணிக்கு, சஞ்சீவிராய பெருமாள் கோவில் அடி வாரத்தில், தலைமலை சேவா டிரஸ்ட் சார்பில், கிரிவலம் துவங்குகிறது. தலைமலை பரம் பரை தர்மகர்த்தா நந்தகோபன், எருமப்பட்டி ஜமீன்தார் சேகர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கிரிவலப்பாதை, 27 கி.மீ., தூரம் உள்ளது. பெருமாள் வாகனமான வெண்குதிரை முன்ன தாக செல்ல, பக்தர்கள் அணிவகுத்து செல்கின்றனர். பக்தர்களுக்கு, காலை, மதிய உணவு வழங்கப்படுகிறது. எருமப்பட்டி, வடவத்தூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பஸ் வசதி செய்ய ப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.