பதிவு செய்த நாள்
14
ஆக
2019
02:08
ஊத்துக்கோட்டை:அடுத்த மாதம், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா, ஆவணி மாதம் சதுர்த்தி திதி நாளன்று, கோலாகலமாக கொண்டாடப் படும். தீவிர பணிவிழாவை ஒட்டி பல்வேறு இடங்களில், விநாயகர் சிலை செய்யும் பணி தீவிர மாக நடந்து வருகிறது.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், பஜார், நாகலாபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில், சிலை கள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இது குறித்து, வியாபாரி என்.ஜெயமூர்த்தி கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சிலை தயாரிக்கும் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. மூன்றடி முதல், 10 அடி வரை விநாயகர் சிலை வியாபாரத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது.
ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் இருந்து பொதுமக்கள் வாங்கிச் செல்வர். ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 3,000 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள, எஸ்.சீனிவாசன் கூறியதாவது: காஞ்சி புரத்தில், நாங்கள் குல தொழிலாக செய்து வருகிறோம். குறிப்பாக, நவராத்திரி விழாவிற்கு தேவையான பொம்மைகள் செய்து வந்தோம். ஏழு ஆண்டுகளாக நாங்கள் விநாயகர் சிலை செய்து தருகிறோம்.
நிறைவுவிநாயகர் சிலை, எலி, மான், சிங்கம், புலி போன்ற வாகனங்களில் விநாயகர் அமர்ந்தி ருப்பது போன்று செய்து வருகிறோம். கோல மாவு, கிழங்கு மாவு, பேப்பர் உள்ளிட்ட பொருட் கள் சேர்த்து சிலைகள் செய்யப்படுகின்றன. விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், விரைவில் இப்பணி நிறைவடையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.