சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு முன்னிட்டு சுவாமி, அம்பாள் தபசுக் கோலத்தில் காட்சியளித்தனர்.இக் கோயில் ஆடித்தபசு விழா ஆக. 3 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் இரவு 7:00 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி , அம்பாள் காட்சியளிக்கும் ஆடித்தபசு நடந்தது.இதில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் தபசு கோலத்தில் காட்சியளித்தனர். மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.