பதிவு செய்த நாள்
16
ஆக
2019
04:08
ஓமலூர்: விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 2ல் கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி, ஓமலூ ரில், சிலை வைத்தல், ஊர்வலம், கரைத்தல் தொடர்பாக, உயர்நீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பு, அனுமதி பெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், டி.எஸ்.பி., பாஸ்கர் தலைமையில், நேற்று (ஆக., 15ல்) நடந்தது. அதில், தடையில்லா சான்று அவசியம் பெற வேண்டும், சிலை வைக்கும் இடத்தில் மின் விளக்கு, தீயணைப்பு சாதனங்கான மணல், தண்ணீர், வாளி ஆகியவை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. ஓமலூர் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி உள்ளிட்ட போலீசார், சிலை வைக்கவுள்ள அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.