பதிவு செய்த நாள்
16
ஆக
2019
04:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன் தினம் (ஆக., 14ல்) இரவு, பூ வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில், பூ பல்லக்கு விழா நடந்தது. மாரியம்மன் சிலையை வண்ண மலர்களால் அலங்கரித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், மாடவீதி வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
இந்நிலையில், ஆடி மாத பவுர்ணமி நேற்று முன்தினம் (ஆக., 14ல்) மாலை மாலை, 4:35 மணி முதல் நேற்று (ஆக., 15ல்) மாலை, 6:11 மணி வரை பவுர்ணமி திதி இருந்ததால், லட்சக்கணக்கான பக்தர்கள், நேற்று இரண்டாவது நாளாக, கிரிவலம் சென்று செய்து வழிபட்டனர்.