விழுப்புரம் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் 18ம் தேதி ஆடிப்பூர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2019 04:08
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், 18ம் தேதி ஆடிப்பூர விழா நடக்கிறது.விழாவையொட்டி, வரும் 18ம் தேதி அதிகாலை ஆதிபராசக்தி அன்னை க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 8:00 மணிக்கு, திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கஞ்சிக் கலய ஊர்வலம் புறப்படுகிறது. இதைய டுத்து சக்தி பீடத்தில், கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து ஆதிபராசக்திக்கு, பக்தர்கள் பால் அபிஷேக செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. முற்பகல் 11:45 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.