பதிவு செய்த நாள்
16
ஆக
2019
04:08
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று (ஆக., 15ல்), ஆவணி அவிட்டத்தை யொட்டி, மதியம், இரண்டு மணி நேரம் கோவில் நடை அடைக்கப்பட்டது.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று (ஆக., 15ல்), சுதந்திர தினத்தையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.மதியம், 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. ஆவணி அவிட்டம் என்பதால், மதியம், 1:30 மணி முதல், மாலை, 3:00 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட்டிருந்தது.
இதனால், பக்தர்கள், இரண்டு மணி நேரம் தரிசனம் இல்லாமல், நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். ஆவணி அவிட்டம் என்பதால், கோவிலில் பணிபுரியும் குருக்கள் அனைவரும் பூணுால் புதிதாக மாற்றம் நடந்ததால், கோவில் நடை அடைக்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. மாலை, 3:00 மணிக்கு பின், இரவு, 9:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி க்கப்பட்டனர். நேற்று, விடுமுறை நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.