ராமநாதபுரத்தில் மதநல்லிணக்க முளைப்பாரி முஸ்லிம்கள் வரவேற்றனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2019 05:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புள்ளிக்காரத்தெரு முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலத்தை பாசிப்பட்டறை தெருவில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் வரவேற்றது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.
ராமநாதபுரம் புளிக்காரத்தெரு மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா ஆக., 4ல் முத் தெடுத்து, ஆக., 6ல் காப்பு கட்டுடன் முத்து பரப்பி விழா துவங்கியது. விழா நாட்களில் இரவு இளையோர் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. நேற்றுமுன்தினம் (ஆக., 14ல்) இரவு அம்மன் கரகம் எடுத்த கோயிலை வந்தடைந்தனர். பெண்கள் அம்மன் கரகத்துடன் முளைப்பாரி எடுத்து கோயிலை வலம்வந்தனர். நேற்று (ஆக., 15ல்) காலையில் அம்மன் கரகம் வீதியுலா நடந்தது. கோயிலில் வாசலில் பெண்கள் பெங்கலிட்டு மாவிளக்கிட்டு வழிபட்டனர்.
மாலையில் இளைஞர்கள் ஒயிலாட்டத்திற்கு பின் முளைப்பாரியுடன் அம்மன் கரகம் ஊர்வ லமாக தெருக்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டது. புளிகாரத்தெரு முத்துமாரியம்மன் கோயில் கமிட்டி தலைவர் அங்குச்சாமி தலைமையில் பாசிப்பட்டறை தெரு வந்தனர். அங்கு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் முகமது நிஷார், அகமது நயினார், சஸ்லான், ஹாஜி ஜபருல்லா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். மதநல்லிணக்கத்திற்காக இந்த வரவேற்பு தொடர்ந்து நடந்து வருகிறது.