நாமக்கல்லில், புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் திறப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2019 04:08
நாமக்கல்: நாமக்கல்லில், புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய திறப்பு விழா நடந்தது. நாமக் கல், என்.ஜி.ஜி.ஓ., காலனியில் புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் திறப்பு விழா விமரி சையாக நடந்தது.
மாலை, 5:00 மணிக்கு முருகன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து சிற்றாலயம் வரை, தேர் பவனி நடந்தது. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடியும், பெண்கள் அன்னையை தேரில் வைத்து சுமந்தபடியும் வந்தனர். மாலை, 6:00 மணிக்கு சிற்றாலயம் திறக்க ப்பட்டது. வாழப்பாடி பங்கு தந்தை விமல்தாஸ் திருப்பலி நிகழ்ச்சியை நடத்தினார். நாமக்கல் பங்கு தந்தைகள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். புதிய சிற்றாலயத்தில் ஒவ்வொரு புதன் கிழமை மாலை, 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.