பதிவு செய்த நாள்
17
ஆக
2019
04:08
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, கொன்னையாரில் உள்ள மதுரைவீரன், வெள்ளை யம்மாள், பொம்மியம்மாள் கோவிலில், ஓராண்டுக்கு முன், கும்பாபிஷேகம் நடந்தது. நாளை (ஆக., 18) இரண்டாமாண்டு பூஜை நடக்க உள்ளது. நேற்று (ஆக., 16ல்) காலை, மோகனூர் வள்ளியம்மன் கோவிலில் அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. நாளை (ஆக., 18ல்) காலை, 6:00 முதல், 9:00 மணிக்குள் விநாயகர் வழிபாடு மற்றும் பல்வேறு ஹோமங்கள் நடக்கும். காலை, 10:30 மணிக்கு சக்தி அழைத்தல், மதியம், 1:00 மணிக்கு பூஜை நடைபெறும்.