திருவாடானை : திருவாடானை அருகே சூச்சனி கிராமத்தில் உள்ள கார்காத்த அய்யனார் கோயில் ஆடி உற்சவ திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடந்த புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேற்று 18ம் தேதி காலை திருவடிமதியூர் கிராமத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் மாலையில் கோயிலை வந்தடைந்தது.விழாவை முன்னிட்டு அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.