பதிவு செய்த நாள்
19
ஆக
2019
03:08
தர்மபுரி: தர்மபுரி விருபாட்சிபுரத்தில் உள்ள புத்திகே மடத்தில், ராகவேந்திர சுவாமியின், 348வது ஆராதனை மகோத்சவ விழா நடந்தது. கடந்த, 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 15ல், சத்ய நாராயண சுவாமி பூஜையும், நேற்று முன்தினம் 17ல் பூர்வ ஆராதனையும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று 18ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது. 10:00 மணிக்கு, பல்லக்கு உற்சவம், 11:00 மணிக்கு, வெள்ளிரத உற்சவம் நடந்தது. இன்று, கணபதி ஹோமம், சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.