பதிவு செய்த நாள்
19
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: ஓம் சக்தி கோவில் திருவிழாவில், பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, ஜிஞ்சம் பட்டியில் உள்ள ஓம் சக்தி கோவில் திருவிழா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவங்கியது.
இதில், மேள, தாளங்கள் முழங்க, பூசாரி கரகம் சுமந்தபடி வந்தார். பெண்கள் பால்குடங்கள் மற்றும் தீச்சட்டியை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு, அம்மனுக்கு தாங்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பாலை ஊற்றி, அபிஷேகம் செய்தனர். பின்னர், சிறப்பு அலங்காரம் செய்து, அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.