நாமக்கல்: ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் கஞ்சி கலயம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். மேல்மருவத்தூர், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், நாமக்கல்லில், ஏழாமாண்டு ஆடிப்பூர விழா நடந்தது. நேற்று 18ம் தேதி காலை, மோகனூர் சாலை, கந்தசாமி கண்டர் பள்ளி வளாகத்தில் இருந்து பக்தர்கள் கஞ்சி கலயம் ஏந்தி ஊர்வலம் சென்றனர். மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பிரதான சாலைகள் வழியாக சென்ற ஊர்வலம், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற வளாகத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து, தீபாராதனை நடந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.