நடுவீரப்பட்டு வரதராஜ பெருமாள் கோவிலில், மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2019 02:08
நடுவீரப்பட்டு:பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி ,பூமாதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் 19ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு, கடந்த 18ம் தேதி, மாலை விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கும்பலங்காரம் நடந்து, இரவு 7:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இரவு 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. நேற்று முன்தினம் 19ம் தேதி திங்கள்கிழமை காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 9:30 மணிக்கு யாகசாலையில் வைத்துள்ள கலசங் கள் ஆலய உலாவாக வந்து 10:10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.