நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதியில் மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு செட்டிப்பிள்ளையார் கோவில், சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவில், மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவில், செங்கழுநீர் விநாயகர் கோவில்,ஜோதி விநாயகர் ஆகிய கோவில்களில் நேற்று முன்தினம் 19ம் தேதி மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு, இரவு 7:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.