பதிவு செய்த நாள்
21
ஆக
2019
02:08
திருத்தணி : முனீஸ்வரர் கோவிலில், நேற்று 20ம் தேதி நடந்த, 4ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
திருத்தணி அடுத்த, நாபளூர், மதுரா குன்னத்துார் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவிலின், கும்பாபிஷேகம் நடந்து, 4ம் ஆண்டு விழா நேற்று 20ம் தேதி நடந்தது.
விழாவையொட்டி, நேற்று 20ம் தேதி காலை, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 18 கலச ங்களுடன் அமைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, விநாயகர், ஆதி முனீஸ்வரர் மற்றும் கருமாரியம்மனுக்கு கலசம் வைத்து யாகம் நடத்தப்பட்டது.
பின், குதிரை வாகனத்திற்கும் கலசம் யாகம் வளர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், கிராம பெண்கள் திரளாக வந்து, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படை த்து வழிபட்டனர். மாலையில், உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது.