பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு நகரில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில், ஆந்திர மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக தொழிற்கூடங்களை அமைத்து இவர்கள், சிலைகளை தயாரித்து வருகின்றனர். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் மீனா, நேற்று 20ம் தேதி, சிலை தயாரிப்பு கூடங்களில் ஆய்வு நடத்தினார்.
இதில், ராதா நகரில் செயல்பட்டு வந்த தொழிற்கூடத்தில், சிலை தயாரிப்பிற்காக, தடை செய்யப் பட்ட ரசாயன பொருட்கள் இருப்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு மூட்டைகளில் இருந்த ரசாயன பொருட்களை பறிமுதல் செய்த மீனா, தொழிலாளர் களை எச்சரிக்கை செய்தார். தடை செய்யப்பட்ட பொருட்களில் சிலைகளை தயாரித்தால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.