செஞ்சி: நெகனுார்பட்டி செல்வ விநாயகர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று 24ல் காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், 108 திரவிய ஹோமம், 9:00 மணி க்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.நாளை 25ம் தேதி காலை 6:00 மணிக்கு வேள்வி பூஜைகளும் தொடர்ந்து 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி விமான மகா கும்பாபி ஷேகமும், தொடர்ந்து மூலவர் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.