பதிவு செய்த நாள்
24
ஆக
2019
02:08
சங்ககிரி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சங்ககிரியில், போலீஸ் துறை சார்பில், கலந்தாய்வு கூட்டம், நேற்று 23ல் நடந்தது. அதில், டி.எஸ்.பி., தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: சிலை வைக்க, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில், அனுமதி பெறவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதபடி, சிலை வைக்க வேண்டும். சிலை வைத்த மூன்று நாளில், கரைத்து விட வேண்டும். கரைக்கச்செல்லும்போது, யாரும் மது அருந்தி விட்டு செல்லக்கூடாது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலை கரைக்கும் இடத்துக்கு, மாலை, 4:30 மணிக்கு முன் சென்று, 6:00 மணிக்குள், நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.